?> Welcome to Thagaval

nra;jpfs; jkpof nra;jpfs;

நெல்லையில் பயங்கரம் போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் இன்று போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி வெட்டிக்கொலை செய்யபட்டார். பிப்ரவரி 24, 02:57 PM நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகே உள்ள புல்லாவெளியை சேர்ந்தவர் சிங்காரம் என்ற சிங்காரவேலன் (வயது 42). இவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் ஆவார். சிங்காரம் மீது சுத்தமல்லியை சேர்ந்த பிரபல ரவுடி மதன் கொலை வழக்கு, பழைய காயலில் நடந்த சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் 2 பேர் கொலை வழக்கு, ஏரலில் நடந்த ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கொலை வழக்கு மற்றும் அடிதடி, கொலை மிரட்டல் வழக்குகள் உள்ளன. போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த சிங்காரம் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை ஒரு வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இன்று காலை தூத்துக்குடி ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் வீரபாகு தலைமையில் போலீஸ்காரர்கள் பிரதாப், பாலசுப்பிரமணி உள்பட 4 பேர் போலீஸ் ஜீப்பில் இன்று நெல்லைக்கு வந்தனர். அவர்கள் சிறையில் இருந்த சிங்காரத்தை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு காலை 10 மணிக்கு தூத்துக்குடி நோக்கி புறப்பட்டனர். போலீஸ் வாகனம் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் நான்கு வழிச்சாலையில் உள்ள சோதனை சாவடியை கடக்க முயன்றபோது சாலையின் இருபுறமும் பதுங்கி இருந்த 15 பேர் கொண்ட கும்பல் திடீரென போலீஸ் ஜீப்பை நோக்கி ஓடி வந்தது. அந்த கும்பலில் அனைவரும் அரிவாள், உருட்டுகட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தனர். இதனைப் பார்த்த போலீஸ் வாகன டிரைவர் வாகனத்தின் வேகத்தை குறைத்தார். அப்போது அந்த கும்பல் ஜீப்பின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த கும்பலை தடுக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் போலீசார் மீது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை ஊற்றி, உருட்டுக்கட்டையால் தாக்கியது. மேலும் போலீஸ்காரர் ஒருவர் வைத்திருந்த துப்பாக்கியை அடித்து உடைத்தது. இந்த திடீர் தாக்குதலாலும், மிளகாய் பொடி கலந்த தண்ணீர் ஊற்றப்பட்டதாலும் போலீசார் நிலைகுலைந்தனர். அதனை பயன்படுத்திக் கொண்ட கும்பல், ஜீப்பின் உள்ளே இருந்த சிங்காரத்தை சரிமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்பு சர்வீஸ் ரோட்டில் தயாராக நின்ற 2 கார்களில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியதில தலை, கை, கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் சிங்காரம் உயிருக்கு போராடினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாளை போலீசார் அங்கு விரைந்து வந்து சிங்காரம் மற்றும் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸ்காரர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிங்காரம் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிங்காரம் சிறிது நேரத்தில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

copy © dailythanthi

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.- ஓ.பன்னீர் செல்வம்.

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.என முன்னாள் முதல்-அமைச்சர் . . . . .

முடக்கபட்ட கட்சி, இரட்டை இலை சின்னத்தை நான் தான் மீட்டு வந்தேன் நடராஜன் பேச்சு

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது . . . . .

காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது

சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு வந்த . . . . .

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்பு

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை . . . . .

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி ப

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி . . . . .

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் . . . . .

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் . . . . .

கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்த மு.க. ஸ்டாலின்

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றபட்டதால் கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்து . . . . .

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம் என்று முன்னாள் முதல் . . . . .

சட்டசபைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கைக்கு முன் . . . . .

பேரவையில் தாக்கப்பட்டேன் கவர்னரிடம் முறையிடப்போகிறோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது பேரவையில் தாக்கப்பட்டேன் சட்டை கிழிக்கபட்டது . . . . .

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி . . . . .

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர . . . . .

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி . . . . .

பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்: மனைவியை கொன்று நாடகமாடிய தொ

பாகல்கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் . . . . .