?> Welcome to Thagaval

rpdpkh tpku;rdk;

அதே கண்கள்

நடிகர்: கலையரசன், பாலசரவணன், நடிகை: ஜனனி அய்யர், ஷிவதா, டைரக்ஷன்: ரோகின் வெங்கடேசன் இசை : ஜிப்ரான் ஒளிப்பதிவு : ரவிவர்மன் கதாநாயகன்–கதாநாயகி: கலையரசன்–ஜனனி அய்யர் டைரக்‌ஷன்: ரோகின் வெங்கடேசன் கதையின் கரு: காதலில் சிக்கி பணத்தை இழந்து ஏமாறும் பார்வையற்ற இளைஞர்கள். ஜனவரி 31, 02:58 PM Chennai: கலையரசன் சிறுவயதிலேயே பார்வையிழந்து சமையல்கலையில் நிபுணத்துவம் பெற்று சொந்தமாக ஓட்டல் நடத்தி சம்பாதிக்கிறார். தோழி ஜனனி அய்யருக்கு அவர்மீது ஒருதலை காதல். தெருவில் வசிக்கும் ஏழைகளிடம் பரிதாபப்பட்டு உணவு வாங்கி கொடுத்து உதவும் ஷிவதாவுக்கும் கலையரசனுக்கும் பரிச்சயம் ஏற்பட்டு நட்பாக பழகி பிறகு காதல்வயப்படுகிறார்கள். ஒருகட்டத்தில் ரவுடி ஒருவன் ஷிவதாவை வழிமறித்து அவரது சகோதரி திருமணத்துக்கு வாங்கிய கடனை உடனடியாக திருப்பி தரும்படி மிரட்டி விட்டு போகிறான். கடனுக்காக ஷிவதாவை கடத்தப்போவதாகவும் எச்சரிக்கிறான். கலையரசன் அந்த பணத்தை தந்து உதவுவதாக ஷிவதாவிடம் வாக்குறுதி கொடுக்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் ஒரு விபத்தில் சிக்கி நினைவிழந்து பல நாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்க நேர்கிறது. சிகிச்சையில் அவருக்கு பார்வையும் வந்து விடுகிறது. குணமடைந்த பிறகு ஷிவதாவை தேடுகிறார். அவரை காணவில்லை. ரவுடிகளிடம் சிக்கி இருப்பாரோ என்று கலங்குகிறார். குடும்பத்தினர் கலையரசனுக்கும் ஜனனி அய்யருக்கும் திருமண ஏற்பாடு செய்கின்றனர். அப்போது ஷிவதாவின் தந்தை கலையரசனை சந்தித்து தனது மகளை ரவுடிகள் கடத்தி விட்டதாகவும் பணம் கொடுத்தால் விட்டு விடுவார்கள் என்றும் சொல்கிறார். ஷிவதா யார்? அவரை கலையரசன் கண்டுபிடித்தாரா? என்பது திகிலான மீதி கதை. கலையரசன் பார்வையற்ற இளைஞராக கதாபாத்திரத்தில் ஒன்றி இருக்கிறார். பார்வை வந்த பிறகு ஷிவதாவுக்கு என்ன ஆகி இருக்குமோ என்று பதற்றமாவதிலும் அவரை மீட்க நகைகளை அள்ளிக்கொண்டு ஓடுவதிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். துப்புதுலக்குவது திருப்பம். ஜனனி அய்யர் காதல் காட்சிகளில் கவர்கிறார். ஷிவதா அழகான காதலியாகவும் வில்லியாகவும் வருகிறார். தன்னை ஏமாற்றியவரை கார் ஏற்றி கொல்வதும் கலையரசனை தீர்த்து கட்ட வெறித்தனமாக மோதுவதும் அவர் கதாபாத்திரத்தை மிரட்சியாக்கி இருக்கிறது. பால சரவணன் சிரிக்க வைக்கிறார். ஜனனி அய்யர் காதலை இன்னும் உயிர்ப்பாக்கி இருக்கலாம். வித்தியாசமான களத்தில் திருப்பமும் விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தி கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் ரோகின் வெங்கடேசன். ஜிப்ரான் இசையும் ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவும் திகில் கதைக்கு பலம் சேர்க்கிறது.

copy © dailythanthi

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

அஜித்

அஜித் . . . . .

பாராட்டு

ராணாவின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் ‘காஸி அட்டாக்’ திரைப்படத்தை . . . . .

கோடிட்ட இடங்களை நிரப்புக

நடிகர்: பார்த்திபன், சாந்தனு, தம்பி ராமையா நடிகை: பார்வதி நாயர் . . . . .

பைரவா

நடிகர்: விஜய் நடிகை: கீர்த்தி சுரேஷ் டைரக்ஷன்: பரதன் இசை . . . . .

போகன்

நடிகர்: ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிகை: ஹன்சிகா மோத்வானி டைரக்ஷன்: . . . . .

எனக்கு வாய்த்த அடிமைகள்

நடிகர்: ஜெய்,கருணாகரன், காளி வெங்கட், தம்பி ராமய்யா, ‘நான் கடவுள்’ . . . . .

சிங்கம்-3

நடிகர்: சூர்யா நடிகை: அனுஷ்கா ஷெட்டி, சுருதிஹாசன் டைரக்ஷன்: ஹரி . . . . .

நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை

நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு உள்ளானார்.இந்த கொடுமை . . . . .

நடிகை கவுதமி ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை . . . . .

மனசாட்சிப்படி வாக்களியுங்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நடிகர் ஆனந்தராஜ் வேண்டுகோள்

மனசாட்சிப்படி வாக்களியுங்கள்’’ என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நடிகர் ஆனந்தராஜ் வேண்டுகோள் . . . . .

32. மனிதநேயம் மிகுந்த மாமனிதர்

அன்பே வா’ படத்திற்காக எம்.ஜி.ஆர். எங்களுக்கு 72 நாட்கள் கால்ஷீட் . . . . .

ரஜினிகாந்த் பட பெயர் சூட்டப்பட்டது சிவகார்த்திகேயன் புதிய படத்தின் பெயர், வேலைக்காரன்

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு, ‘வேலைக்காரன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. . . . . .

S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?

சூர்யாவின் S3 படம் கடந்த வருட இறுதியிலேயே வெளியாகி இருக்க . . . . .

சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?

தமிழ் சினிமாவில் ராதாரவி ஒரு திறமையான, மூத்த நடிகர். பல . . . . .

ஜல்லிக்கட்டைப்போலவே கோவிலுக்கு அதிரடியாய் மர்மமாய் வந்த விஜய் - புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இவர் எப்போதும் . . . . .