?> Welcome to Thagaval

rpdpkh tpku;rdk;

கோடிட்ட இடங்களை நிரப்புக

நடிகர்: பார்த்திபன், சாந்தனு, தம்பி ராமையா நடிகை: பார்வதி நாயர் டைரக்ஷன்: இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இசை : சத்யா ஒளிப்பதிவு : அர்ஜுன் ஜனா கதாநாயகன்-கதாநாயகி: சாந்தனு-பார்வதி நாயர். டைரக்‌ஷன்: பார்த்திபன். கதையின் கரு: வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வரும் ஒரு தமிழ் இளைஞனுக்கு ஏற்படும் அனுபவங்கள். சாந்தனு, வெளிநாட்டில் ‘சாப்ட்வேர்’ தொழில் செய்யும் இளைஞர். நிலம் வாங்குவதற்காக, சென்னை வருகிறார். அவருக்கு ரியல் எஸ்டேட் தரகரான பார்த்திபன் உதவ முன்வரு ஜனவரி 16, 11:54 AM Chennai: கதாநாயகன்-கதாநாயகி: சாந்தனு-பார்வதி நாயர். டைரக்‌ஷன்: பார்த்திபன். கதையின் கரு: வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வரும் ஒரு தமிழ் இளைஞனுக்கு ஏற்படும் அனுபவங்கள். சாந்தனு, வெளிநாட்டில் ‘சாப்ட்வேர்’ தொழில் செய்யும் இளைஞர். நிலம் வாங்குவதற்காக, சென்னை வருகிறார். அவருக்கு ரியல் எஸ்டேட் தரகரான பார்த்திபன் உதவ முன்வருகிறார். வீட்டு சாப்பாட்டை விரும்பும் சாந்தனுவின் ரசனை அறிந்து, அவரை தன் வீட்டிலேயே தங்க வைக்கிறார். வயதான அவருக்கு மோகினி என்ற பெயரில், ஒரு அழகான மனைவி. (பார்வதி நாயர்) பார்த்திபனுடன் இல்லற வாழ்க்கையில் திருப்தி இல்லாத பார்வதி நாயர், சாந்தனுவுடன் நெருக்கமாக பழகுகிறார். சபலத்தை தூண்டுகிற மாதிரி நடந்து கொள்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில், அவருடைய சபல வலையில் சாந்தனுவும் சிக்குகிறார். இருவரும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, இணைந்து விடுகிறார்கள். அதை பார்த்திபனின் நண்பர் தம்பிராமய்யா பார்த்து விடுகிறார். அவர் பார்த்திபனிடம் சொல்லி விடுகிறார். பார்த்திபன் என்ன செய்தார், சாந்தனு-பார்வதி நாயர் இருவரும் என்ன ஆகிறார்கள்? என்பது எதிர்பாராத திருப்பத்துடன் கூடிய ‘கிளைமாக்ஸ்.’ சென்னை விமான நிலையத்தில், கதை ஆரம்பிக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் சாந்தனுவை பார்த்திபன் வரவேற்று அழைத்துச் செல்வது போல் படம் தொடங்குகிறது. மோகினி (பார்வதி நாயர்) பேயா, பெண்ணா? என்ற சின்ன ‘சஸ்பென்ஸ்’சுடன் ஆரம்ப காட்சிகள் நகர்கின்றன. அவர் பெண்தான் என்பது நிரூபணம் ஆனதும், கதை ‘கிளுகிளுப்பான ரூட்’டுக்கு மாறுகிறது. மோகினியின் மோக வலைவீச்சு பற்றி தனது குரு சிம்ரனிடம் சாந்தனு அவ்வப்போது போனில் தெரிவிப்பது போலவும், அவருக்கு சிம்ரன் ஆலோசனை சொல்வது போலவும் கதை நகர்ந்து, கேள்விக்குறியுடன் இடைவேளை வருகிறது. இடைவேளைக்குப்பின், திரைக்கதை விறுவிறுப்பாக பயணித்து, யூகிக்க முடியாத காட்சியுடன் முடிவுக்கு வருகிறது. வெளிநாட்டில் ‘சாப்ட்வேர்’ தொழிலில் இருக்கும் இளைஞர் கதாபாத்திரத்தில், சாந்தனு கச்சிதம். ஆரம்பத்தில் பார்வதி நாயரின் ‘மோகினி விளையாட்டில்’ பயந்து மிரண்டு போவதையும், பின்னர், பார்வதி நாயரின் அழகில் படிப்படியாக மயங்குவதையும் மிக தெளிவாக முகத்துக்கு கொண்டு வருகிறார். “தப்பு செய்து விட்டோம்” என்ற குற்ற உணர்ச்சியில் ஏற்படும் தவிப்பை மிக இயல்பாக காட்டுகிறார். ஒரு விபத்தில் கால் ஊனமான வயதான ஆசாமியாக பார்த்திபன். அவருக்கே உரிய வசன விளையாட்டுகளுடன் படம் முழுக்க சிரிக்க வைக்கிறார். சில இடங்களில், கைதட்டவும் வைக்கிறார். ‘மோகினி’ கதாபாத்திரத்துக்கு மிக சரியான தேர்வு, பார்வதி நாயர். அவருடைய வசீகரமான உடற்கட்டும், நடிப்பும்தான் படத்தின் பிரதான அம்சம். சாந்தனுவுக்கு சபலத்தை தூண்டுகிற காட்சிகளில், மற்ற கவர்ச்சி நாயகிகளுக்கு சவால் விட்டு இருக்கிறார். ஓடிப்போன மனைவி தொடர்பான தம்பிராமய்யாவின் நகைச்சுவை காட்சிகள், தியேட்டரை அமர்க்களப்படுத்துகின்றன. அர்ஜுன் ஜனாவின் ஒளிப்பதிவு, காட்சிகளை அழகாக கடத்துகிறது. சத்யா இசையில், பாடல்கள் எடுபடவில்லை. பின்னணி இசை, கதையுடன் இசைந்து இருக்கிறது. இடைவேளை வரை கதை மப்பும் மந்தாரமுமாக (மந்தமாக) நகர்கிறது. இடையிடையே வரும் சிலேடை மற்றும் ‘பசுமை புரட்சி’ வசனங்களுக்கு தியேட்டரில் சிலர் கைதட்டுகிறார்கள். படத்தின் கடைசி பதினைந்து நிமிட காட்சிகள், பார்த்திபனின் வித்தியாசமான சிந்தனை.

copy © dailythanthi

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

அஜித்

அஜித் . . . . .

பாராட்டு

ராணாவின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் ‘காஸி அட்டாக்’ திரைப்படத்தை . . . . .

அதே கண்கள்

நடிகர்: கலையரசன், பாலசரவணன், நடிகை: ஜனனி அய்யர், ஷிவதா, டைரக்ஷன்: . . . . .

பைரவா

நடிகர்: விஜய் நடிகை: கீர்த்தி சுரேஷ் டைரக்ஷன்: பரதன் இசை . . . . .

போகன்

நடிகர்: ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிகை: ஹன்சிகா மோத்வானி டைரக்ஷன்: . . . . .

எனக்கு வாய்த்த அடிமைகள்

நடிகர்: ஜெய்,கருணாகரன், காளி வெங்கட், தம்பி ராமய்யா, ‘நான் கடவுள்’ . . . . .

சிங்கம்-3

நடிகர்: சூர்யா நடிகை: அனுஷ்கா ஷெட்டி, சுருதிஹாசன் டைரக்ஷன்: ஹரி . . . . .

நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை

நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு உள்ளானார்.இந்த கொடுமை . . . . .

நடிகை கவுதமி ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை . . . . .

மனசாட்சிப்படி வாக்களியுங்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நடிகர் ஆனந்தராஜ் வேண்டுகோள்

மனசாட்சிப்படி வாக்களியுங்கள்’’ என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நடிகர் ஆனந்தராஜ் வேண்டுகோள் . . . . .

32. மனிதநேயம் மிகுந்த மாமனிதர்

அன்பே வா’ படத்திற்காக எம்.ஜி.ஆர். எங்களுக்கு 72 நாட்கள் கால்ஷீட் . . . . .

ரஜினிகாந்த் பட பெயர் சூட்டப்பட்டது சிவகார்த்திகேயன் புதிய படத்தின் பெயர், வேலைக்காரன்

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு, ‘வேலைக்காரன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. . . . . .

S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?

சூர்யாவின் S3 படம் கடந்த வருட இறுதியிலேயே வெளியாகி இருக்க . . . . .

சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?

தமிழ் சினிமாவில் ராதாரவி ஒரு திறமையான, மூத்த நடிகர். பல . . . . .

ஜல்லிக்கட்டைப்போலவே கோவிலுக்கு அதிரடியாய் மர்மமாய் வந்த விஜய் - புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இவர் எப்போதும் . . . . .