?> Welcome to Thagaval

nra;jpfs; jkpof nra;jpfs;

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார். பிப்ரவரி 18, 03:51 PM சென்னை, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க இன்று தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. இதில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், சட்டபை களேபரமானது. மைக்குகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து இருமுறை சபை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அவையில் தொடர்ந்து அமளி நீடித்ததால் திமுக உறுப்பினர்கள் அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதன்பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததால், எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபித்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 11 வாக்குகள் விழுந்தன. இதையடுத்து, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது:- “ தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும். எனவே இறுதியில் தர்மமே வெல்லும். 15 நாட்களாக அடைக்கப்பட்டு இருந்த எம்.எல்.ஏக்களை தொகுதிக்கு அனுப்பி வையுங்கள் ஒருவாரம் கழித்து மீண்டும் சட்டப்பேரவையை கூட்டுங்கள் என்று சபாநாயருக்கு கோரிக்கை விடுத்தோம்.இரண்டாவது ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், சபாநாயகர் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. ஜனநாயக மரபுகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம். சட்ட மன்ற உறுப்பினர்கள் தொகுதி மக்களை சந்திக்க வேண்டும். துரோகம் செய்து விட்டு தொகுதிக்கு வரலாமா? என்ற நிலை எம்.எல்.ஏக்களுக்கு வரும். ஜெயலலிதா அணியான எங்களுக்கே வெற்றி கிடைக்கும். தேவைப்பட்டால் கவர்னரை சந்திப்போம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

copy © dailythanthi

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

நெல்லையில் பயங்கரம் போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் இன்று போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி . . . . .

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.- ஓ.பன்னீர் செல்வம்.

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.என முன்னாள் முதல்-அமைச்சர் . . . . .

முடக்கபட்ட கட்சி, இரட்டை இலை சின்னத்தை நான் தான் மீட்டு வந்தேன் நடராஜன் பேச்சு

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது . . . . .

காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது

சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு வந்த . . . . .

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்பு

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை . . . . .

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி ப

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி . . . . .

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் . . . . .

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் . . . . .

கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்த மு.க. ஸ்டாலின்

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றபட்டதால் கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்து . . . . .

சட்டசபைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கைக்கு முன் . . . . .

பேரவையில் தாக்கப்பட்டேன் கவர்னரிடம் முறையிடப்போகிறோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது பேரவையில் தாக்கப்பட்டேன் சட்டை கிழிக்கபட்டது . . . . .

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி . . . . .

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர . . . . .

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி . . . . .

பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்: மனைவியை கொன்று நாடகமாடிய தொ

பாகல்கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் . . . . .