?> Welcome to Thagaval

njhopy;El;gk;

நோக்கியா N சீரிஸ்: புத்தம் புதுப் பொலிவுடன் மீண்டும் வெளியாகும்

நோக்கியா நிறுவனத்தின் பிரபலமான N சீரிஸ் பெயரில் புதிய போன்கள் மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்ய எச்எம்டி குளோபல் திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியினை எச்எம்டி நிறுவனம் கோரியுள்ளது. பீஜிங்: மொபைல் போன் சந்தையில் நோக்கியா பிராண்டு ஏற்படுத்திய தாக்கத்தை யாராலும் மறக்கவும், மறுக்கவும் முடியாது. மொபைல் போன் விற்பனையில் பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கும் நோக்கியா நிறுவனம் சந்தையில் சில காலம் இடைவெளி எடுத்துக் கொண்டாலும் இன்றும் நோக்கியாவிற்கான பெயர் அப்படியே தான் இருக்கிறது எனலாம். விரைவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் பல்வேறு நோக்கியா போன்களை எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் எச்எம்டி குளோபல் பழைய நோக்கியா N சீரிஸ் போன்களை மீட்க முடிவு செய்துள்ளது. அதன் படி நோக்கியா N பெயரில் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட கோரும் உரிமையை எச்எம்டி குளோபல் சீனாவின் தொழில் மற்றும் வர்த்தக நிர்வாக ஆணையத்திடம் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இத்தகவல் உண்மையாய் இருந்து அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் எச்எம்டி குளோபல் மற்றும் நோக்கியா மீண்டும் N சீரிஸ் பெயரில் போன்களை வெளியிடும். முன்னதாக மொபைல் போன் சந்தையின் 70% நோக்கியா N சீரிஸ் போன்கள் ஆக்கிரமித்திருந்தன. நோக்கியா N70, N80, N90, N91, N92 உள்ளிட்ட சாதனங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. நோக்கியா N சீரிஸ் பெயரில் முதல் மொபைல் போன் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவை சிம்பயான் இயங்குதளம் கொண்டிருந்ததோடு ப்ளூடூத், 3G/ வை-பை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டன. பின் நோக்கியா N சீரிஸ் போன்களுக்கு மாற்றாக லூமியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. எனினும் இது N சீரிஸ் போன்கள் போன்று வெற்றி பெறவில்லை. இன்னும் சில தினங்களில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா துவங்க உள்ள நிலையில் நோக்கியா N சீரிஸ் போன்கள் வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

copy © Maalaimalar

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

ரூ.3999க்கு விற்பனையாகும் ஐபோன் 6: இது பிளிப்கார்ட்டில் மட்டும்தானாம்

பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையின் கீழ் ஆப்பிள் ஐபோன்-6, . . . . .

ஐபோன் 8: முன்னதாக துவங்கும் தயாரிப்பு பணிகள்

ஆப்பிள் ஐபோன்களின் 10-வது ஆண்டு விழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. . . . . .

ஏர்டெல் சர்பிரைசஸ்: கூடுதல் டேட்டா மற்றும் சலுகைகள் அறிவிப்பு

பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் சர்பிரைசஸ் என்ற பெயரில் தனது . . . . .

வயர்லெஸ் கனெக்டிவிட்டியின் அடுத்த அத்தியாயம் 5G: சின்னம் மற்றும் பெயர் உறுதி செய்யப்பட்டது

உலக தொழில்நுட்ப சந்தையில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி முக்கிய பங்காற்றி வரும் . . . . .

புதிய வசதிகளுடன் பீம் செயலி: விரைவில் அறிமுகமாகிறது

இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்ய வழி செய்யும் . . . . .

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நோக்கியா 6: விலை எவ்வளவு தெரியுமா?

சீனாவில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நோக்கியா 6 . . . . .

ஜியோ ஸ்மார்ட் மூவி டவுன்லோடு வசதி அறிமுகம்: இனி இரவிலும் தரவிறக்கம் செய்யலாம்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் செயலிகளில் ஜியோசினிமா செயலியில் புதிய . . . . .

சென்னையில் வோடபோன் 4ஜி சேவைகள் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன், இன்று சென்னையில் தனது . . . . .

பான் கார்டு பெற, வரி செலுத்த புதிய ஆப்: வருமான வரித்துறை மும்முரம்

வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) மற்றும் . . . . .

ஜியோவை முந்தியது ஏர்டெல் 4ஜி: டிராய் அறிக்கையில் பின்தங்கிய ஜியோ

இந்திய டெலிகாம் சந்தையை புரட்டிப்போட்ட ரிலையன்ஸ் ஜியோ இம்முறை அதன் . . . . .

மீண்டும் களத்தில் இறங்கும் நோக்கியா 3310: இம்முறை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டுள்ளது?

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் களமிறங்க இருப்பதாக கூறப்படும் நோக்கியா . . . . .

ஊழல் வழக்கில் சாம்சங் தலைலர் கைது செய்யப்பட்டுள்ளது சாம்சங்-ஐ இப்போதைக்கு பாதிக்காது

சியோல்: சாம்சங் நிறுவனத்துடன் இரு நிறுவனங்களை இணைப்பது தொடர்பாக தென்கொரிய அதிபரிக்கு . . . . .

பில்கேட்ஸ் 86 வயதாகும் போது உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர்

பில்கேட்ஸ் 86 வயதாகும் போது உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர் . . . . .

குறைமாதக் குழந்தைளுக்காகவே வடிவமைக்கப்பட்ட மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேன்னர்

குறைமாதக் குழந்தைளுக்காகவே வடிவமைக்கப்பட்ட மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேன்னரை பிரிட்டன் மருத்துவர்கள் பயன்படுத்தத் . . . . .

கூகிள் பயன்பாடுகள் பதிவு செய்யப்படுவதை நிறுத்துவது எப்படி.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்த தொடங்கும் போதே கட்டாயமாக கூகிள் . . . . .