?> Welcome to Thagaval

njhopy;El;gk;

ஏர்டெல் சர்பிரைசஸ்: கூடுதல் டேட்டா மற்றும் சலுகைகள் அறிவிப்பு

பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் சர்பிரைசஸ் என்ற பெயரில் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் கூடுதல் டேட்டா மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றது. புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் சர்பிரைசஸ் (Airtel Surprises) என்ற பெயரில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2 மில்லியனை எட்டியதை தொடர்ந்து இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. "2 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் சர்பிரைசஸ் வழங்குவதில் ஆர்வமாக உள்ளோம். கூடுதல் சலுகைகளின் மூலம், எங்களது வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை பெற முடியும்", என பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேமந்த் குமார் குருசுவாமி அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தகவல்களின் படி ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாத வாக்கில் 2 மில்லியனை கடந்தது. புதிய சலுகையின் மூலம் ஏர்டெல் ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் திட்டத்தில் கூடுதல் டேட்டா பெற முடியும். இதே போல் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் மூவிஸ் சேவையையும் பயன்படுத்த முடியும். ஏர்டெல் மூவிஸ் சேவையில் 10,000க்கும் அதிகமான திரைப்படங்கள் வழங்கப்படுகின்றன. ஏர்டெல் சர்பிரைசஸ் திட்டத்தை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஏர்டெல் இணையத்தளம் சென்று பிராட்பேண்ட் சர்பிரைசஸ் பிரிவில் “surprise” ஆப்ஷனினை அன்லாக் செய்ய வேண்டும். நவம்பர் 30, 2016 வரை பிராட்பேண்ட் சேவை வழங்கும் டாப்-5 நிறுவனங்களின் பட்டியலில் பிஎஸ்என்எல் (9.95 மில்லியன் வாடிக்கையாளர்கள்), பாரதி ஏர்டெல் (2.03 மில்லியன்), அடிரா கன்வெர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் (1.14 மில்லியன்), எம்டிஎன்எல் (1.05 மில்லியன்) மற்றும் யு பிராட்பேண்ட் (0.60 மில்லியன்) இடம் பிடித்துள்ளன.

copy © Maalaimalar

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

நோக்கியா N சீரிஸ்: புத்தம் புதுப் பொலிவுடன் மீண்டும் வெளியாகும்

நோக்கியா நிறுவனத்தின் பிரபலமான N சீரிஸ் பெயரில் புதிய போன்கள் . . . . .

ரூ.3999க்கு விற்பனையாகும் ஐபோன் 6: இது பிளிப்கார்ட்டில் மட்டும்தானாம்

பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையின் கீழ் ஆப்பிள் ஐபோன்-6, . . . . .

ஐபோன் 8: முன்னதாக துவங்கும் தயாரிப்பு பணிகள்

ஆப்பிள் ஐபோன்களின் 10-வது ஆண்டு விழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. . . . . .

வயர்லெஸ் கனெக்டிவிட்டியின் அடுத்த அத்தியாயம் 5G: சின்னம் மற்றும் பெயர் உறுதி செய்யப்பட்டது

உலக தொழில்நுட்ப சந்தையில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி முக்கிய பங்காற்றி வரும் . . . . .

புதிய வசதிகளுடன் பீம் செயலி: விரைவில் அறிமுகமாகிறது

இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்ய வழி செய்யும் . . . . .

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நோக்கியா 6: விலை எவ்வளவு தெரியுமா?

சீனாவில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நோக்கியா 6 . . . . .

ஜியோ ஸ்மார்ட் மூவி டவுன்லோடு வசதி அறிமுகம்: இனி இரவிலும் தரவிறக்கம் செய்யலாம்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் செயலிகளில் ஜியோசினிமா செயலியில் புதிய . . . . .

சென்னையில் வோடபோன் 4ஜி சேவைகள் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன், இன்று சென்னையில் தனது . . . . .

பான் கார்டு பெற, வரி செலுத்த புதிய ஆப்: வருமான வரித்துறை மும்முரம்

வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) மற்றும் . . . . .

ஜியோவை முந்தியது ஏர்டெல் 4ஜி: டிராய் அறிக்கையில் பின்தங்கிய ஜியோ

இந்திய டெலிகாம் சந்தையை புரட்டிப்போட்ட ரிலையன்ஸ் ஜியோ இம்முறை அதன் . . . . .

மீண்டும் களத்தில் இறங்கும் நோக்கியா 3310: இம்முறை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டுள்ளது?

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் களமிறங்க இருப்பதாக கூறப்படும் நோக்கியா . . . . .

ஊழல் வழக்கில் சாம்சங் தலைலர் கைது செய்யப்பட்டுள்ளது சாம்சங்-ஐ இப்போதைக்கு பாதிக்காது

சியோல்: சாம்சங் நிறுவனத்துடன் இரு நிறுவனங்களை இணைப்பது தொடர்பாக தென்கொரிய அதிபரிக்கு . . . . .

பில்கேட்ஸ் 86 வயதாகும் போது உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர்

பில்கேட்ஸ் 86 வயதாகும் போது உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர் . . . . .

குறைமாதக் குழந்தைளுக்காகவே வடிவமைக்கப்பட்ட மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேன்னர்

குறைமாதக் குழந்தைளுக்காகவே வடிவமைக்கப்பட்ட மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேன்னரை பிரிட்டன் மருத்துவர்கள் பயன்படுத்தத் . . . . .

கூகிள் பயன்பாடுகள் பதிவு செய்யப்படுவதை நிறுத்துவது எப்படி.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்த தொடங்கும் போதே கட்டாயமாக கூகிள் . . . . .