?> Welcome to Thagaval

nra;jpfs; jkpof nra;jpfs;

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 18, 04:03 AM சமாதானம் புதுவை லாஸ்பேட்டை மடுவுபேட்டையை சேர்ந்தவர் ரவுடி முரளி (வயது 32). இவரும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி சுந்தர் என்பவரும் நண்பர்கள் ஆவார்கள். பிரபல ரவுடி மர்டர் மணிகண்டனின் ஆதரவாளர்களான இவர்கள் மீது தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் மிரட்டி பறித்த நிலத்தை பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்தனர். தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வந்த இவர்களுக்கிடையே தொடர்ந்து உரசல் இருந்து வந்ததால் ஒருவரையொருவர் பழிவாங்க திட்டம் தீட்டி வந்தனர். இதற்கிடையே அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைக்க தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த பிரபல தாதா ஒருவர் ஏற்பாடு செய்தார். பிரபல தாதா இதைத்தொடர்ந்து கவுண்டன்பாளையத்தில் உள்ள ஒரு இடத்துக்கு முரளி வரவழைக்கப்பட்டார். சுந்தர் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அங்கு வந்தனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்த போது ஏற்பட்ட தகராறை தொடர்ந்து சுந்தர் ஆதரவாளர்களால் முரளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சமாதானத்திற்கு ஏற்பாடு செய்த அந்த பிரபல தாதா முன்னிலையிலேயே இந்த கொலை நடந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலையை தொடர்ந்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தப்பியோடிவிட்டனர். தற்போது அவர்களில் 4 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தேடுதல் வேட்டை இதனிடையே சமாதானத்துக்கு ஏற்பாடு செய்த பிரபல தாதா உள்ளிட்ட சிலர் தமிழக பகுதிகளில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களை பிடிக்க கோரிமேடு காவல்நிலையம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் தமிழக பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

copy © dailythanthi

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

நெல்லையில் பயங்கரம் போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் இன்று போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி . . . . .

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.- ஓ.பன்னீர் செல்வம்.

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.என முன்னாள் முதல்-அமைச்சர் . . . . .

முடக்கபட்ட கட்சி, இரட்டை இலை சின்னத்தை நான் தான் மீட்டு வந்தேன் நடராஜன் பேச்சு

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது . . . . .

காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது

சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு வந்த . . . . .

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்பு

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை . . . . .

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி ப

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி . . . . .

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் . . . . .

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் . . . . .

கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்த மு.க. ஸ்டாலின்

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றபட்டதால் கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்து . . . . .

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம் என்று முன்னாள் முதல் . . . . .

சட்டசபைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கைக்கு முன் . . . . .

பேரவையில் தாக்கப்பட்டேன் கவர்னரிடம் முறையிடப்போகிறோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது பேரவையில் தாக்கப்பட்டேன் சட்டை கிழிக்கபட்டது . . . . .

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி . . . . .

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி . . . . .

பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்: மனைவியை கொன்று நாடகமாடிய தொ

பாகல்கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் . . . . .