?> Welcome to Thagaval

nra;jpfs; jkpof nra;jpfs;

பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்: மனைவியை கொன்று நாடகமாடிய தொ

பாகல்கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 18, 01:47 AM பெங்களூரு, பாகல்கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மனைவியை கொன்று நாடகமாடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பெண் சாவு பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகா சிசகண்டி கிராமத்தில் வசித்து வருபவர் சந்துரு கலபனுரு(வயது 30). தொழிலாளி. இவருடைய மனைவி ரத்னவ்வா(25). இந்த நிலையில், வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் ரத்னவ்வா இறந்து கிடப்பதாகவும், அவர் பாம்பு கடித்து இறந்ததாகவும், அவரை கடித்த பாம்பை அடித்து கொன்றதாகவும் சந்துரு கலபனுரு கிராமத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு கிராமத்தினர் சென்றனர். அப்போது, ரத்னவ்வா இறந்து கிடந்ததோடு, அவர் அருகே செத்துப்போன பாம்பு ஒன்று கிடந்தது. இருப்பினும், சிலருக்கு ரத்னவ்வாவின் சாவில் சந்தேகம் எழுந்தது. இதனால், அவர்கள் லோகாபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரத்னவ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கடந்த 14–ந் தேதி நடந்தது. கணவர் கைது இந்த நிலையில், பிரேத பரிசோதனையில் ரத்னவ்வா பாம்பு கடித்து இறக்கவில்லை என்பதும், அவரை யாரோ கழுத்தை நெரித்து கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் ரத்னவ்வாவின் கணவர் சந்துருவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. அதாவது சந்துரு தனது மனைவியை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, லோகாபுரா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சந்துருவை கைது செய்தனர். நாடகம் மேலும், கொலைக்கான காரணம் குறித்து சந்துருவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:– ரத்னவ்வாவின் தங்கை(கொழுந்தியாள்) மீது சந்துருவுக்கு மோகம் ஏற்பட்டது. அவரை 2–வதாக திருமணம் செய்து கொள்ள சந்துரு முடிவு செய்தார். கொழுந்தியாளை 2–வது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். மேலும், கொலையை மறைக்கும் நோக்கத்தில் ரத்னவ்வா பாம்பு கடித்து இறந்ததாக கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இந்த நாடகத்தை அரங்கேற்றுவதற்காக முன்னதாகவே ஒருவரிடம் ரூ.1,000–க்கு பாம்பு ஒன்றை சந்துரு வாங்கி உள்ளார். பின்னர், திட்டமிட்டப்படி ரத்னவ்வாவை கொன்றுவிட்டு அவர் வைத்திருந்த பாம்பை கொன்று ரத்னவ்வாவின் உடல் அருகே போட்டு நாடகத்தை அரங்கேற்றி உள்ளார். இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

copy © dailythanthi

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

நெல்லையில் பயங்கரம் போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் இன்று போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி . . . . .

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.- ஓ.பன்னீர் செல்வம்.

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.என முன்னாள் முதல்-அமைச்சர் . . . . .

முடக்கபட்ட கட்சி, இரட்டை இலை சின்னத்தை நான் தான் மீட்டு வந்தேன் நடராஜன் பேச்சு

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது . . . . .

காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது

சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு வந்த . . . . .

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்பு

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை . . . . .

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி ப

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி . . . . .

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் . . . . .

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் . . . . .

கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்த மு.க. ஸ்டாலின்

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றபட்டதால் கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்து . . . . .

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம் என்று முன்னாள் முதல் . . . . .

சட்டசபைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கைக்கு முன் . . . . .

பேரவையில் தாக்கப்பட்டேன் கவர்னரிடம் முறையிடப்போகிறோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது பேரவையில் தாக்கப்பட்டேன் சட்டை கிழிக்கபட்டது . . . . .

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி . . . . .

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர . . . . .

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி . . . . .