?> Welcome to Thagaval

nra;jpfs; ,e;jpah

அகமத்நகர் அருகே மதுகுடித்து 7 பேர் பலியானதால் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு

அகமத்நகர் அருகே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வைத்த இரவு விருந்தில், மது குடித்த 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். பிப்ரவரி 18, 04:01 AM அகமத்நகர், அகமத்நகர் அருகே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வைத்த இரவு விருந்தில், மது குடித்த 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த உள்ளூர் பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தனர். 7 பேர் பலி அகமத்நகர் மாவட்டம் பங்கர்மால் கிராம உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தன்னுடைய ஆதரவாளர்களுக்கு விருந்து அளித்தார். அப்போது, மதுவும் பரிமாறப்பட்டன. இதை மதுபான பிரியர்கள் ஆர்வத்துடன் குடித்தனர். இதையடுத்து, மறுநாள் காலை அவர்களுக்கு திடீரென வாந்தி- பேதி ஏற்பட்டது.இதனால், மிகவும் சோர்வுற்ற நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தனர். இதைத்தொடர்ந்து, மேலும் 4 பேர் உயிர் இழந்தனர். இதனால், சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர்கள் குடித்த மதுபானத்தில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததே காரணம் என்பது தெரியவந்தது. தேர்தல் புறக்கணிப்பு இதையறிந்த உள்ளூர் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், நேற்று முன்தினம் நடந்த மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து சமிதி தேர்தலையும் முழுமையாக புறக்கணித்தனர். ஒருவர் கூட ஓட்டுப்போட வாக்குச்சாவடிக்கு வரவில்லை. தாசில்தார் சுதீர் பாட்டீல் மற்றும் உதவி தேர்தல் அதிகாரி அருண் ஆனந்த்கர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்த போதிலும், அதற்கு பொதுமக்கள் செவிசாய்க்கவில்லை. இதனால், பங்கர்மால் கிராமத்தில் வாக்குப்பதிவு பூஜ்ய சதவீதமாக இருந்தது. 3 பேர் கைது இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்து, உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.

copy © dailythanthi

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

நெல்லையில் பயங்கரம் போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் இன்று போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி . . . . .

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.- ஓ.பன்னீர் செல்வம்.

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.என முன்னாள் முதல்-அமைச்சர் . . . . .

முடக்கபட்ட கட்சி, இரட்டை இலை சின்னத்தை நான் தான் மீட்டு வந்தேன் நடராஜன் பேச்சு

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது . . . . .

காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது

சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு வந்த . . . . .

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்பு

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை . . . . .

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி ப

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி . . . . .

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் . . . . .

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் . . . . .

கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்த மு.க. ஸ்டாலின்

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றபட்டதால் கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்து . . . . .

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம் என்று முன்னாள் முதல் . . . . .

சட்டசபைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கைக்கு முன் . . . . .

பேரவையில் தாக்கப்பட்டேன் கவர்னரிடம் முறையிடப்போகிறோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது பேரவையில் தாக்கப்பட்டேன் சட்டை கிழிக்கபட்டது . . . . .

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி . . . . .

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர . . . . .

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி . . . . .