?> Welcome to Thagaval

nra;jpfs; ,e;jpah

மும்பை மாநகராட்சி தேர்தல் அனல் பறக்கும் பிரசாரம் நாளை ஓய்கிறது

மும்பை மாநகராட்சி தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம் நாளை ஓய்கிறது மும்பை மாநகராட்சி தேர்தல் மும்பை மாநகராட்சியின் தேர்தல் வருகிற 21–ந் தேதி நடக்கிறது. பிப்ரவரி 18, 04:30 AM மும்பை, மும்பை மாநகராட்சி தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம் நாளை ஓய்கிறது மும்பை மாநகராட்சி தேர்தல் மும்பை மாநகராட்சியின் தேர்தல் வருகிற 21–ந் தேதி நடக்கிறது. இத்துடன் மாநிலத்தில் உள்ள மேலும் 9 மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறுகிறது. கூட்டணி கட்சிகளாக இருந்த சிவசேனா– பா.ஜனதா, காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியும் தனியாக போட்டியிடுகிறது. இதன் காரணமாக மும்பை மாநகராட்சி தேர்தல் களத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பலமுனை போட்டி நடக்கிறது. மனு தாக்கல் மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 27–ந் தேதி தொடங்கி 3–ந் தேதி வரை நடந்தது. குறிப்பாக மும்பையில் உள்ள மொத்தம் 227 வார்டுகளில் சிவசேனா, பா.ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மராட்டிய நவநிர்மாண் சேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 271 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து மும்பை முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. வேட்பாளர்களும் மக்களை சந்தித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடக்கும் தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி ஆதரவு திரட்டி வருகிறார்கள். தலைவர்கள் பிரசாரம் சிவசேனா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோரும், பா.ஜனதா வேட்பாளர்களுக்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார் ஆகியோரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்ப்பில் கட்சியின் தலைவர் சரத்பவாரும், நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் அதன் தலைவர் ராஜ் தாக்கரேயும் ஆதரவு திரட்டி வருகின்றனர். இதேபோல் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் மும்பையில் பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் உள்ளிட்ட அக்கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள். பிரசாரம் நாளை ஓய்கிறது நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தாராவி மற்றும் சயான் கோலிவாடாவில் தேர்தல் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, நடிகை நக்மா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதன் காரணமாக தேர்தல் பிரசாரம் களை கட்டியது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சியினரின் அனல் பறக்கும் பிரசாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதையடுத்து, வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. நகரில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 7 ஆயிரத்து 304 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

copy © dailythanthi

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

நெல்லையில் பயங்கரம் போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் இன்று போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி . . . . .

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.- ஓ.பன்னீர் செல்வம்.

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.என முன்னாள் முதல்-அமைச்சர் . . . . .

முடக்கபட்ட கட்சி, இரட்டை இலை சின்னத்தை நான் தான் மீட்டு வந்தேன் நடராஜன் பேச்சு

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது . . . . .

காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது

சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு வந்த . . . . .

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்பு

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை . . . . .

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி ப

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி . . . . .

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் . . . . .

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் . . . . .

கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்த மு.க. ஸ்டாலின்

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றபட்டதால் கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்து . . . . .

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம் என்று முன்னாள் முதல் . . . . .

சட்டசபைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கைக்கு முன் . . . . .

பேரவையில் தாக்கப்பட்டேன் கவர்னரிடம் முறையிடப்போகிறோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது பேரவையில் தாக்கப்பட்டேன் சட்டை கிழிக்கபட்டது . . . . .

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி . . . . .

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர . . . . .

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி . . . . .