?> Welcome to Thagaval

nra;jpfs; murpay;

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 188 பேர் கைது

தேனியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 188 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெரியகுளத்தில் ஊர்வலமாக சென்றனர். பிப்ரவரி 18, 04:30 AM தடையை மீறி ஆர்ப்பாட்டம் தேனியில், பெரியகுளம் சாலையில் எஸ்.பி.ஐ. திடலில் இருந்து நேரு சிலை வரை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஊர்வலம் செல்ல இருப்பதாக தகவல் பரவியது. இதை யடுத்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எஸ்.பி.ஐ. திடலுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலம் செல்ல இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பு இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தேனி அல்லிநகரம் நகராட்சி 4-வது வார்டு அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கிருஷ்ணபிரபா அய்யப்பன் தலைமை தாங்கி பேசினார். இதில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நகர செயலாளர் சுந்தரம், 32-வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் வைகை கருப்பு உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். மேலும், வி.கே.சசிகலாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். பெரியகுளத்தில் ஊர்வலம் இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேன், மினிபஸ்களில் ஏற்றி தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில் மண்டப வாசலில் இறங்கியும் சிலர் தங்களின் வீடுகளுக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டம் தொடர்பாக, 148 பெண்கள் உள்பட 188 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இரவில் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே நேற்று மாலை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திடீரென்று பெரியகுளம் தென்கரை மூன்றாந்தல் பகுதியில் ஒன்று கூடினர். அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கதிர்காமு எம்.எல்.ஏ. ஆகியோரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் கோஷமிட்டனர். பின்னர் அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக தென்கரை வள்ளுவர் சிலை அருகே சென்று பின்னர் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

copy © dailythanthi

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

நெல்லையில் பயங்கரம் போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் இன்று போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி . . . . .

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.- ஓ.பன்னீர் செல்வம்.

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.என முன்னாள் முதல்-அமைச்சர் . . . . .

முடக்கபட்ட கட்சி, இரட்டை இலை சின்னத்தை நான் தான் மீட்டு வந்தேன் நடராஜன் பேச்சு

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது . . . . .

காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது

சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு வந்த . . . . .

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்பு

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை . . . . .

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி ப

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி . . . . .

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் . . . . .

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் . . . . .

கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்த மு.க. ஸ்டாலின்

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றபட்டதால் கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்து . . . . .

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம் என்று முன்னாள் முதல் . . . . .

சட்டசபைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கைக்கு முன் . . . . .

பேரவையில் தாக்கப்பட்டேன் கவர்னரிடம் முறையிடப்போகிறோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது பேரவையில் தாக்கப்பட்டேன் சட்டை கிழிக்கபட்டது . . . . .

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி . . . . .

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர . . . . .

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி . . . . .