?> Welcome to Thagaval

nra;jpfs; cyfnra;jpfs;

பாகிஸ்தானில் 39 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை பாதுகாப்பு படைகள் அதிரடி

பாகிஸ்தானில் வழிபாட்டு தல தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பிப்ரவரி 18, 03:30 AM இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் வழிபாட்டு தல தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இதில் 39 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வழிபாட்டு தல தாக்குதல் பாகிஸ்தானில் சிந்து மாகாணம், செவான் நகரில் உள்ள லால் ஷாபாஸ் கலந்தர் வழிபாட்டு தலத்தில் நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் வழிபாட்டுக்காக குவிந்திருந்தனர். அப்போது அங்கு தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் நுழைந்தார். அவர் கண் இமைக்கும் நேரத்தில் தன் உடலில் கட்டி எடுத்து வந்திருந்த சக்திவாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலில் 100 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 20 பேர் ஏதுமறியாத அப்பாவிக்குழந்தைகள் என்பது கல் நெஞ்சையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. 210 பேர் காயம் அடைந்து செவான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடம் அளிக்கிற வகையில் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. பிரதமர் கண்டனம் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடித்து ஒடுக்காமல் விடமாட்டேன் என சபதம் செய்தார். இதேபோன்று பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா, “நாட்டின் ஒவ்வொரு சொட்டு ரத்த இழப்புக்கும் பழிதீர்ப்போம். நிச்சயமாக பழிதீர்ப்போம். யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது” என்று கூறினார். பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, “சேவான் வழிபாட்டுதல தாக்குதல், பயங்கரவாதத்தின் மிக மோசமான வடிவம்” என கூறி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், “இது நமது கலாசாரத்தின், வரலாற்றின், நாகரிகத்தின் மீதான தாக்குதல். பயங்கரவாதிகளை எதிர்த்து ஒவ்வொரு தனி மனிதனும் போரிட வேண்டும். பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார். அதிரடி உத்தரவு இந்த தாக்குதலுக்கு 3 நாள் அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என சிந்து மாகாண அரசு அறிவித்து, கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கிடையே செவான் வழிபாட்டு தல தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த நிலையில் நாடு முழுவதும் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நவாஸ் ஷெரீப் அரசு, பாதுகாப்பு படைகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டது. அதன்படி நாடு முழுவதும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியை பாதுகாப்பு படைகள் தொடங்கின. 39 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை சிந்து மாகாணத்தில் மட்டும் 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வட மேற்கு மாகாணத்தில் 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மொத்தத்தில் நாடு முழுவதும் 39 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக நேற்று மதியம் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகளின் முகாம்கள், மறைவிடங்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். மேலும் விடிய விடிய நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில், 47 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் டோர்காம் எல்லை மூடி சீல் வைக்கப்பட்டது. அத்துடன் தாங்கள் தேடி வருகிற 76 பயங்கரவாதிகளை ஒப்படைக்குமாறு ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.

copy © dailythanthi

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

நெல்லையில் பயங்கரம் போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் இன்று போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி . . . . .

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.- ஓ.பன்னீர் செல்வம்.

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.என முன்னாள் முதல்-அமைச்சர் . . . . .

முடக்கபட்ட கட்சி, இரட்டை இலை சின்னத்தை நான் தான் மீட்டு வந்தேன் நடராஜன் பேச்சு

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது . . . . .

காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது

சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு வந்த . . . . .

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்பு

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை . . . . .

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி ப

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி . . . . .

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் . . . . .

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் . . . . .

கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்த மு.க. ஸ்டாலின்

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றபட்டதால் கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்து . . . . .

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம் என்று முன்னாள் முதல் . . . . .

சட்டசபைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கைக்கு முன் . . . . .

பேரவையில் தாக்கப்பட்டேன் கவர்னரிடம் முறையிடப்போகிறோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது பேரவையில் தாக்கப்பட்டேன் சட்டை கிழிக்கபட்டது . . . . .

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி . . . . .

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர . . . . .

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி . . . . .