?> Welcome to Thagaval

nra;jpfs; ,e;jpah

உத்தரபிரதேசத்துக்கு தத்துப்பிள்ளை தேவை இல்லை மோடி மீது பிரியங்கா தாக்கு

ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்த பிரியங்கா, உத்தர பிரதேசத்துக்கு தத்துப்பிள்ளை தேவை இல்லை என கூறினார். பிப்ரவரி 18, 05:45 AM ரேபரேலி, ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்த பிரியங்கா, உத்தர பிரதேசத்துக்கு தத்துப்பிள்ளை தேவை இல்லை என கூறினார். தத்துப்பிள்ளை உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, உத்தரபிரதேச மாநிலம் தன்னை மகனாக தத்தெடுத்து இருப்பதாக கூறினார். இதை காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், சோனியாவின் மகளுமான பிரியங்கா குறைகூறியுள்ளார். உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் முதல் முறையாக நேற்று பங்கேற்ற அவர் சோனியாவின் பாராளுமன்ற தொகுதியான ரேபரேலியில் நடந்த பிரசார கூட்டத்தில், தனது சகோதரரும், காங்கிரஸ் துணைத்தலைவருமான ராகுல் காந்தியுடன் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் கூறியதாவது:- 2 இளைஞர்கள் உள்ளனர் பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே வாரணாசி தொகுதி தன்னை மகனாக தேர்ந்தெடுத்து இருப்பதாகவும், எனவே அதை முன்னேற்றுவேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் வெளியில் இருந்து யாரையாவது தத்தெடுக்க உத்தரபிரதேசத்துக்கு தேவை ஏற்பட்டு உள்ளதா? என நான் கேட்கிறேன். மோடிஜி, வெளியாட்கள் யாரையும் தேர்ந்தெடுப்பதற்கான தேவை இந்த மாநிலத்துக்கு இருக்கிறதா? இங்கு இளைஞர்கள் யாரும் இல்லையா? உத்தரபிரதேசத்தை தங்கள் எண்ணத்திலும், இதயத்திலும் தாங்கியுள்ள ராகுல் மற்றும் அகிலேஷ் ஆகிய 2 இளைஞர்கள் இங்கு இருக்கின்றனர். கூட்டணி வெற்றி அப்படியிருக்கும் போது உத்தரபிரதேசத்துக்கு தத்துப்பிள்ளை தேவை இல்லை. வெளியில் இருந்து ஒரு தலைவர் தேவை இல்லை. இங்குள்ள ஒவ்வொரு இளைஞரும் ஒரு தலைவராக உருவாக முடியும். மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு இளைஞரும் வேகமாக உழைக்க முடியும். இவ்வாறு உணர்ச்சிவசத்துடன் பேசிய பிரியங்கா, சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யுமாறு மக்களை கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தி குற்றச்சாட்டு இதைத்தொடர்ந்து உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி வெற்று வாக்குறுதிகளை அளிப்பதாக குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் உறவு முறைகளை உருவாக்குகிறார். வாரணாசிக்கு சென்றபோது கங்கையை தனது தாயாகவும், தான் வாரணாசியின் மகன் என்றும் சொந்தம் கொண்டாடினார். வாரணாசியை மாற்றிக்காட்டுவேன் என்று கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது சூளுரைத்தார். கங்கை நதி தூய்மை, ரிங் ரோடு, இலவச வை-பை வசதி, போஜ்புரி சினிமா நகரம் என வாரணாசிக்கு அவர் அளித்த வாக்குறுதிகள் ஏராளம். ஆனால் மோடிஜி உங்கள் தாய்க்கு (கங்கை) அளித்த வாக்குறுதியை கூட நீங்கள் நிறைவேற்றவில்லை. வெற்று வாக்குறுதிகளால் மட்டும் உறவுகள் வளராது. அதை பேணி வளர்த்தால் தான் பலப்படும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

copy © dailythanthi

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

நெல்லையில் பயங்கரம் போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் இன்று போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி . . . . .

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.- ஓ.பன்னீர் செல்வம்.

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.என முன்னாள் முதல்-அமைச்சர் . . . . .

முடக்கபட்ட கட்சி, இரட்டை இலை சின்னத்தை நான் தான் மீட்டு வந்தேன் நடராஜன் பேச்சு

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது . . . . .

காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது

சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு வந்த . . . . .

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்பு

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை . . . . .

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி ப

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி . . . . .

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் . . . . .

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் . . . . .

கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்த மு.க. ஸ்டாலின்

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றபட்டதால் கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்து . . . . .

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம் என்று முன்னாள் முதல் . . . . .

சட்டசபைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கைக்கு முன் . . . . .

பேரவையில் தாக்கப்பட்டேன் கவர்னரிடம் முறையிடப்போகிறோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது பேரவையில் தாக்கப்பட்டேன் சட்டை கிழிக்கபட்டது . . . . .

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி . . . . .

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர . . . . .

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி . . . . .