?> Welcome to Thagaval

nra;jpfs; cyfnra;jpfs;

பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 76 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் மசூதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 76 பேர் உயிரிழந்தனர். பிப்ரவரி 17, 09:28 AM கராச்சி, பாகிஸ்தானில் சிந்து மாகாணம் செவான் நகரில், சூஃபி இஸ்லாமியர்களின் மசூதியில் வியாழக்கிழமை இரவு, மதத் தலைவரான சூஃபி லால் ஷாபாஸ் குவாலந்தருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் குவிந்து இருந்த மசூதியின் பிரதான வாயில் வழியாக உள்ள வந்த தற்கொலைப் படை பயங்கரவாதி, முதலில் ஒரு கையெறி குண்டை அங்கிருந்தவர்களை நோக்கி வீசினான். அது வெடிக்கவில்லை. உடனே அவன், தன் உடலில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்க செய்தான். இந்த குண்டு வெடிப்பில் சுமார் 100 பேர் பலியானார்கள் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது. பாகிஸ்தான் போலீஸ் வெளியிட்டு உள்ள தகவலில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 76 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 250-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் மருத்துவமனை தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்து உள்ளது. மசூதியை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. 27 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர், இருப்பினும் பயங்கரவாதி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்திவிட்டான் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாதிகள்தான் சூஃபி இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்துவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 25 சூஃபி புனிதத் தலங்களில் அந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே, அவர்கள்தான் இத்தாக்குதலையும் நடத்தியிருப்பார்கள் என்று சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இது, ஒரு வாரத்தில் நடக்கும் 5–வது பயங்கரவாத தாக்குதல் ஆகும். புனித தலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் செரீப் கண்டனம் தெரிவித்து உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்து உள்ளனர்.

copy © dailythanthi

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

நெல்லையில் பயங்கரம் போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் இன்று போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி . . . . .

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.- ஓ.பன்னீர் செல்வம்.

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.என முன்னாள் முதல்-அமைச்சர் . . . . .

முடக்கபட்ட கட்சி, இரட்டை இலை சின்னத்தை நான் தான் மீட்டு வந்தேன் நடராஜன் பேச்சு

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது . . . . .

காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது

சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு வந்த . . . . .

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்பு

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை . . . . .

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி ப

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி . . . . .

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் . . . . .

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் . . . . .

கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்த மு.க. ஸ்டாலின்

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றபட்டதால் கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்து . . . . .

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம் என்று முன்னாள் முதல் . . . . .

சட்டசபைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கைக்கு முன் . . . . .

பேரவையில் தாக்கப்பட்டேன் கவர்னரிடம் முறையிடப்போகிறோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது பேரவையில் தாக்கப்பட்டேன் சட்டை கிழிக்கபட்டது . . . . .

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி . . . . .

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர . . . . .

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி . . . . .